என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » காங்கிரஸ். கலைத்துவிட்டது
நீங்கள் தேடியது "காங்கிரஸ். கலைத்துவிட்டது"
ஜி.எஸ்.டி.யில் 99 சதவீத பொருட்கள் 18 சதவீத வரி பட்டியலில் கொண்டுவரப்படும் என்று பிரதமர் அறிவித்திருப்பதற்கு, காங்கிரஸ் அவரது ஆழ்ந்த தூக்கத்தை கலைத்துவிட்டதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். #GST #Modi #RahulGandhi #Congress
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 18-ந் தேதி, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) மேலும் எளிமைப்படுத்தப்படும் என்றும், 99 சதவீத பொருட்கள் 18 சதவீத வரி பட்டியலில் கொண்டுவரப்படும் என்றும் அறிவித்தார். இதன்மூலம் சில ஆடம்பர பொருட்களுக்கு மட்டும் 28 சதவீத வரி தொடரும் என்பதை அவர் மறைமுகமாக தெரிவித்தார்.
பிரதமரின் இந்த அறிவிப்பை காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்தது. இதுபற்றி கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், “இது மத்திய அரசின் காலம்கடந்த ஞானம். நாங்கள் 18 சதவீத நிலை யான வரியில் ஜி.எஸ்.டி.யை அறிமுகம் செய்தோம். அப்போது அதனை எதிர்த்துவிட்டு, இப்போது அதையே மத்திய அரசு செய்ய முயல்கிறது. இதுதான் தேசிய ஜனநாயக கூட்டணியின் வழக்கம்” என்று கூறியிருந்தார்.
காங்கிரஸ் தலைவர்கள் பலரும், இது மத்திய அரசின் இரட்டை நிலைப்பாடு மற்றும் போலித்தனம் என்றும், மத்திய அரசு முன்பு தான் கேலி செய்தவற்றை எல்லாம் இப்போது நிறைவேற்றுகிறது என்றும் கூறினர். இப்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இந்த பிரச்சினைக்காக பிரதமரை குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் டுவிட்டர் வலைத்தளத்தில், “கப்பர் சிங் டேக்ஸ் (ஜி.எஸ்.டி.) பிரச்சினையில் இறுதியாக காங்கிரஸ் கட்சி நரேந்திர மோடியின் ஆழ்ந்த தூக்கத்தை கலைத்துவிட்டது. என்றாலும் இன்னும் சோம்பேறித்தனமான, அவர் முன்பு காங்கிரஸ் கட்சியின் ‘கிரேண்ட் ஸ்டுப்பிட் தாட்’ (ஜி.எஸ்.டி.) என்று கூறியதை இப்போது அமல்படுத்த விரும்புகிறார். இது மிகவும் தாமதமான முடிவு பிரதமரே” என்று கூறியுள்ளார். #GST #Modi #RahulGandhi #Congress

×

X